/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ., கட்சியினர் கைது
/
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ., கட்சியினர் கைது
ADDED : ஏப் 22, 2025 01:47 AM
தர்மபுரி:ஹிந்து மதத்தை பற்றி அவதுாறாக பேசிய, தி.மு.க., வனத்துறை அமைச்சர் பொன்முடியை கைது செய்ய கோரி, பா.ஜ.,வினர் நேற்று தர்மபுரி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், பா.ஜ., மகளிரணி மாவட்ட தலைவர் சங்கீதா தலைமை வகித்தார். மாநில மகளிரணி செயற்குழு உறுப்பினர் சங்கீதா முன்னிலை வகித்தார். ஹிந்து மதம் மற்றும் பெண்களை இழிவு படுத்தி பேசிய, தி.மு.க.,வை சேர்ந்த, தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடியை கைது செய்ய வேண்டும். மேலும், பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷமிட்டனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, டி.எஸ்.பி., சிவராமன் தலைமையிலான, போலீசார், பா.ஜ., மாவட்ட தலைவர் சரவணன், மகளிரணி நிர்வாகிகள் பிரபாவதி, தேவி, முருகம்மாள், வசந்தா, கிருத்திகா உட்பட, 48 பேரை கைது செய்தனர்.