நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்கோடு: பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் அருகே, வருவாய் துறையை கண்டித்து, பா.ஜ., மத்திய நலத்திட்ட பிரிவு மாவட்ட துணைத்தலைவர் சிவா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அங்கு பணிபுரியும் அலுவலர்-களின் மெத்தன போக்கை கண்டித்தும், பொதுமக்களின் நிலங்-களை அளவீடு செய்ய, காலம் தாழ்த்தும் சர்வேயர்களை கண்-டித்தும், கோஷமிட்டனர். இதில், பா.ஜ., நகர தலைவர் கணேசன், நிர்வாகிகள் ஸ்ரீதேவி, சேட்டு, பெரியண்னன், ராஜா, முனியப்பன் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

