ADDED : டிச 10, 2025 10:21 AM

தர்மபுரி: பா.ஜ., மகளிரணி சார்பில், பெருங்கோட்ட பொறுப்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோ-சனை கூட்டம், தர்மபுரி டவுனில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. தர்மபுரி மாவட்ட மகளிரணி தலைவி கலையரசி வரவேற்றார்.
இதில் பங்கேற்க வந்த, மாநில மகளிரணி தலைவி கவிதா, நிருபர்களிடம் கூறியதாவது:மகளிரணியின் வருங்கால செயல்பாடுகள், அமைப்பு ரீதியாக மகளிர் அணியை வலுப்படுத்த, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுகின்றனர். இதில், தர்மபுரி, கிருஷ்ணகிரி உட்பட, 6 மாவட்டங்களை சேர்ந்த பெருங்கோட்டத்திற்கு, மகளிரணியில் மாநில, மாவட்ட நிர்வாகிகளை நியமித்து அவர்-களுக்கான ஆலோசனை மற்றும் அறிமுக கூட்ட-மாக நடத்தப்படுகிறது. மேலும், வரும் ஜன., மாதம் திருச்சியில் நடக்கவுள்ள மகளிரணி மாநாடுக்கு, 'தமிழ் மகள் தாமரை மாநாடு - 2.0' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. திறனற்ற, தி.மு.க., அரசை தமிழகத்திலிருந்து துாக்கி எறிய வேண்டும்
என்ற நோக்கத்தில், இந்த மாநாடு நடத்-தப்படுகிறது. தமிழகத்தில் பெண்களுக்கு பாது-காப்பற்ற சூழல் உள்ளது. ஹிந்துக்களுக்கு விரோ-தமான ஆட்சி நடக்கிறது. பெரும்பான்மையாக உள்ள ஹிந்துக்களின் வழிபாட்டு முறையை, தி.மு.க., அரசு பறிக்கிறது. பெண்கள் பாதுகாப்பு மற்றும் உரிமைக்காக போராடுபவர்களை பொய் வழக்குகளை போட்டு முடக்கி வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

