/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பா.ஜ., சார்பில் சுதந்திர தின இரு சக்கர வாகன பேரணி
/
பா.ஜ., சார்பில் சுதந்திர தின இரு சக்கர வாகன பேரணி
ADDED : ஆக 15, 2025 03:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர், அரூர் நகர மற்றும் ஒன்றிய, பா.ஜ., சார்பில், சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, நேற்று இரு சக்கர வாகன பேரணி நடந்தது.
மாவட்ட பொதுச்செயலாளர் பிரவீன் தலைமை வகித்தார். அரூர், பா.ஜ., அலுவலகத்தில் துவங்கிய பேரணி, நான்கு ரோடு, நடேசா பெட்ரோல் பங்க், சந்தைமேடு, கடைவீதி, பஸ் ஸ்டாண்ட், கச்சேரிமேடு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்றது. பேரணியின்போது, தேசியக்கொடியை ஏந்தியபடி, பா.ஜ.,வினர் தேசத்தை வாழ்த்தி கோஷம் எழுப்பினர்.