ADDED : டிச 19, 2025 06:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்கோடு: பாலக்கோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், ரத்த தான முகாம் நடந்தது. கல்-லுாரி முதல்வர் தீர்த்தலிங்கம் தலைமை வகித்தார்.
வட்டார மருத்துவ அலுவலர் சிவகுரு, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இளவரசு, சுகாதார ஆய்வாளர்கள் சோமு, தமிழ்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முகாமில், கல்லுாரி மாணவர்கள், 82 யூனிட் ரத்தம் வழங்-கினர். ரத்த தானம் வழங்கிய மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.

