/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
போடூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
/
போடூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED : டிச 07, 2024 07:29 AM
பென்னாகரம்: பென்னாகரம் பேரூராட்சி, போடூர் கிராமத்தில் உள்ள மாரி-யம்மன், தண்டு மாரியம்மன், கரக கோவில் அம்மன், முனி-யப்பன் ஆலய அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா நேற்று நடந்-தது.
பென்னாகரம் அருகே போடூர் பகுதியில், 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன், தண்டு மாரியம்மன், கரக கோவில் அம்மன், முனியப்பன் கோவில்கள் உள்ளன. இந்த பகுதி மக்கள் ஒன்றிணைந்து, புதிதாக கோவில் அமைக்கும் பணியில்
ஈடுபட்டு வந்தனர். பணிகள் நிறைவுற்ற நிலையில் கும்பாபிஷேக விழாவின், முக்கிய நிகழ்வான முகூர்த்தக்கால் நடுதல்
தொடங்கி, முளைப்பாரி இடுதல், கங்கணம் கட்டுதல் நிகழ்வுகள் நடைபெற்-றது.நேற்று முன்தினம் தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்தக்குடங்களை எடுத்து பஸ்
ஸ்டாண்ட், கடைவீதி, போடூர் நான்கு சாலை சந்திப்பு வழியாக கோவிலை வந்தடைந்தனர். இதையடுத்து நேற்று காலை,
9:15 மணிக்கு மாரி-யம்மன், தண்டு மாரியம்மன், கரக கோவில் அம்மன், முனி-யப்பன் கோவில் கோபுரங்கள், மூலவருக்கு
அஷ்டபந்தன கும்பா-பிஷேக விழா நடந்தது. பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்-கப்பட்டது.ஏற்பாடுகளை ஊர் தலைவர் அதிபதி தலைமையில், ஊர் கவுண்டர் முருகன், கோம்பு கவுண்டர் துரை மற்றும்
பொன்னு-சாமி, கோம்பு மந்திரி கவுண்டர் கந்தசாமி, பூசாரி பவுனேசன் உள்-ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள்
செய்திருந்தனர்.