/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
குண்டும், குழியுமாக சேதமான பொம்மிடி---பில்பருத்தி சாலை
/
குண்டும், குழியுமாக சேதமான பொம்மிடி---பில்பருத்தி சாலை
குண்டும், குழியுமாக சேதமான பொம்மிடி---பில்பருத்தி சாலை
குண்டும், குழியுமாக சேதமான பொம்மிடி---பில்பருத்தி சாலை
ADDED : நவ 04, 2024 04:29 AM
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவிலுள்ள, தாளநத்தம், அய்யம்-பட்டி, குருபரஹள்ளி, வேப்பிலை பட்டி, கேத்துரெட்டிப்பட்டி, பில்பருத்தி கிராம மக்கள், பல்வேறு தேவைகளுக்காக பொம்மிடி செல்கின்றனர்.
இதேபோன்று, தினமும் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள், மருத்துவமனை, மின்வாரிய அலுவலகம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகம் செல்பவர்கள், பில்பருத்தி -- ---புத்தர் நகர் ----------பொம்மிடி சாலையை பயன்படுத்தி வருகின்றனர். வாகன ஓட்டிகள், குண்டும், குழியுமான இச்சாலையில் செல்ல முடியாமல், தினமும் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த, 5 ஆண்டுகளுக்கும் மேலாக இச்சாலை சீரமைக்கப்படா-ததால், இவ்வழியாக சென்ற அரசு பஸ்களும் நிறுத்தப்பட்டன. இப்பகுதி மக்கள் புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டி, பல-முறை கோரிக்கை மனுக்கள் கொடுத்தும், அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இதனால், இந்த வழியை பயன்படுத்தி வரும், 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்-றனர். எனவே, கிராம மக்கள் நலன் கருதி, விரைந்து புதிய தார்ச்-சாலை அமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.