/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
'தீயணைப்பு துறையில் பவுசர் வாகனம் சேர்ப்பு'
/
'தீயணைப்பு துறையில் பவுசர் வாகனம் சேர்ப்பு'
ADDED : ஏப் 29, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி,:தமிழக முதல்வர் உத்தரவின்படி, தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறைக்கு மாவட்டம் வாரியாக, புதிய ரக தீயணைப்பு வாகனங்கள் வழங்கப்படுகிறது.
இதில், புதிய ரக, வாட்டர் பவுசர் வாகனம், 61.70 லட்சம்  ரூபாய் மதிப்பில், செயற்கருவிகள் தளவாடங்களுடன் கொள்முதல் செய்து, ஒவ்வொரு நிலையத்திற்கும் வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தர்மபுரி தீயணைப்பு மீட்பு பணி நிலையத்திற்கு, புதிய வாட்டர் பவுசர் வாகனம் வழங்கப்பட்டது. அதை தர்மபுரி மாவட்ட அலுவலர் அம்பிகா வாகனத்தை இயக்கி  துவக்கி வைத்தார். இதில், அனைத்து  பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

