/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
முருகன் கோவிலில் பிரம்மோற்சவ விழா
/
முருகன் கோவிலில் பிரம்மோற்சவ விழா
ADDED : மார் 16, 2024 01:25 AM
பாலக்கோடு:பேளாரஹள்ளி, முருகன் கோவில், 48ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்துள்ள பேளாரஹள்ளி கிராமத்தில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, இங்குள்ள முருகன் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடப்பது வழக்கம்.
இந்நிலையில், இந்த ஆண்டு பங்குனி உத்திரம் வரும், 25ல், நடக்க உள்ளது. இதையொட்டி, 48ம் ஆண்டு முருகர் பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கோவில் வளாகத்திலுள்ள கற்பக விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
தொடர்ந்து கொடி மரத்திற்கு அலங்காரம் செய்யப்பட்டு, கரும்பு, வாழை மரங்கள் கட்டப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு கொடியேற்றம் நடந்தது. பின், மூலவருக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்தனர்.
ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

