ADDED : செப் 18, 2026 01:49 AM

நல்லம்பள்ளி: நல்லம்பள்ளி அருகே, ஏலகிரியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் உடைந்து, குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்துள்ள கெங்கலாபுரம் -- சாமிசெட்டிப்பட்டி நெடுஞ்சாலையில் ஏலகிரி, சாமிசெட்டிபட்டி, கொப்பக்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் உள்ளது.இதில், ஏலகிரி பஞ்., பஸ் ஸ்டாப் அருகே, சாலையின் நடுவி-லுள்ள ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்-பட்டு, கடந்த ஒரு வாரமாக குடிநீர் வீணாக வெளியேறி வருகி-றது.
அதை குடிநீர் பராமரிப்பு குழு அலுவலர்கள் கண்டுகொள்ளா-ததால், குடிநீர் சாலையில் வீணாக வெளியேறி வருகிறது.
தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்-பாடு அதிகளவில் உள்ள நிலையில், வீணாக குடிநீர் வெளியேறு-வதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யாமல், அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவதால், குடிநீர் வெளியேறி, வீணாகி வருவதாக, பொதுமக்கள் குற்றச்-சாட்டுகின்றனர்.
