ADDED : செப் 18, 2026 01:48 AM

அ நிறம் | அளவு
அரூர்: மழை வேண்டி அரூர் மேல்பாட்சாபேட்டை சக்தி விநாயகர் கோவிலில் இருந்து, நேற்று காலை, 10:45 மணிக்கு மேள, தாளத்-துடன் பக்தர்கள் சீர்வரிசை மற்றும் பால்குடங்களை ஊர்வலமாக மேட்டுப்பட்டி மாரியம்மன் கோவிலுக்கு எடுத்துச் சென்றனர்.
அங்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, பூஜை நடந்தது. தொடர்ந்து, மதியம், 1:00 மணிக்கு களி, கருவாட்டு குழம்புடன் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், அங்காளம்மன், வேடி-யப்பன், காட்டுமாரியம்மன், கோட்டை காளியம்மன் மற்றும் உள்ளூர் மாரியம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
