ADDED : ஜன 13, 2025 02:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பென்னாகரம்: பென்னாகரம் அடுத்த, முதுகம்பட்டி வனப்பகுதி தரைப்பா-லத்தின் அருகில் இருந்த குப்பையில், 40, வயது மதிக்கதக்க ஆண் சடலம் ஒன்று பாதி எரிந்த நிலையில் இருந்தது. முகம், கை, கால்கள் முழுவதும் கருகியதால், இறந்தவர் யார் என்பது அடையாளம் தெரியவில்லை.
இது குறித்து, கூக்குட்ட மருதஹள்ளி வி.ஏ.ஓ., அமுதா பென்னா-கரம் போலீசில் புகார் அளித்தார். இதில், தீயில் எரிந்து கருகியவர் தவறி விழுந்து இருந்தாரா அல்லது வேறு இடத்தில் இறந்தவரை குப்பையில் போட்டு எரித்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.