வறட்சி பாதித்த மாவட்டமாக தர்மபுரியை அறிவிக்க வலியுறுத்தல்
வறட்சி பாதித்த மாவட்டமாக தர்மபுரியை அறிவிக்க வலியுறுத்தல்
ADDED : செப் 20, 2026 03:08 AM
தர்மபுரி: அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின், தர்மபுரி மாவட்ட, 5வது மாநாடு பாலக்கோட்டில் நேற்று நடத்தது. மாவட்ட தலைவர் ரவி தலைமை வகித்தார். மாநில பொதுச்-செயலாளர் அமிர்தலிங்கம் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.
இதில், விவசாய தொழிலாளர்களின் நலன் காக்க ஒருங்கி-ணைந்த மத்திய சட்டம் கொண்டு வரவேண்டும். தர்மபுரி மாவட்-டத்தில் வீடற்ற விவசாய தொழிலாளர்களுக்கு இலவச மனை-பட்டா வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். இத்திட்டத்-திற்கு போதுமான நிதியை, மத்திய அரசு ஒதுக்க வேண்டும். இதில், ஆண்டுக்கு, 200 நாள் வேலை, ஒரு நாள் சம்பளம், 600 ரூபாய் வழங்க வேண்டும். இத்திட்டத்தை பேரூராட்சி நகராட்-சியில் விரிவுபடுத்த வேண்டும். தர்மபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து பஞ்.,களுக்கும், 100 நாள் வேலை வழங்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் தொடர் வறட்சி நீடித்து வருகிறது. பருவ-மழையின்றி, விவசாயம் செய்ய முடியாத சூழல் உள்ளது. விவ-சாய தொழிலாளர்களுக்கும் வேலை இல்லை. எனவே, தர்மபுரி மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து, உரிய நிவாரணம் வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்-மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
