ADDED : செப் 20, 2026 03:07 AM

அ நிறம் | அளவு
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த அச்சல்வாடி, ஒடசல்பட்டி, கூக்கடப்பட்டி, வாச்சாத்தி உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில், நேற்று மாலை, 4:00 மணி முதல் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.
இதனால் தாழ்வான பகுதியிலுள்ள வயல்களில் வெள்ளநீர் தேங்-கியது. வறட்சியால் கரும்பு, பாக்கு, வாழை, மரவள்ளிகிழங்கு, சோளம், மஞ்சள் உள்ளிட்ட பயிர்கள் காய்ந்து வந்த நிலையில், நேற்று பெய்த கனமழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.
