/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
19ல் தி.மு.க., அரசை கண்டித்துமெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்
/
19ல் தி.மு.க., அரசை கண்டித்துமெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்
19ல் தி.மு.க., அரசை கண்டித்துமெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்
19ல் தி.மு.க., அரசை கண்டித்துமெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்
ADDED : ஏப் 17, 2025 01:54 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை:
நீட் நுழைவு தேர்வை ரத்து செய்வோம் என பொய் கூறி, ஆட்சியை பிடித்த, தி.மு.க., அரசால், தங்கள் உயிரை நீத்த மாணவ, மாணவியருக்கு, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, அ.தி.மு.க., மாணவரணி சார்பில், வரும், 19 மாலை, 6:00 மணிக்கு, மாணவரணி மாவட்ட செயலாளர் ராகுல் தலைமையில், எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாவட்ட செயலாளர் கார்த்திக், மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில், கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்த உள்ளனர்.
இதில், மாவட்டத்திலுள்ள அனைத்து நிர்வாகிகள், கட்சியினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.