/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கார் மோதி விபத்து: மூன்று பேர் காயம் பைக் எரிந்து நாசம்
/
கார் மோதி விபத்து: மூன்று பேர் காயம் பைக் எரிந்து நாசம்
கார் மோதி விபத்து: மூன்று பேர் காயம் பைக் எரிந்து நாசம்
கார் மோதி விபத்து: மூன்று பேர் காயம் பைக் எரிந்து நாசம்
ADDED : ஆக 03, 2025 01:06 AM
சூளகிரி, சூளகிரி அருகே, பைக் மீது கார் மோதிய விபத்தில் மூன்று பேர் காயமடைந்தனர். மேலும் பைக் எரிந்து நாசமானது.கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த கொல்லப்பள்ளி அருகே, கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை, 9:30 மணிக்கு டிஸ்கவர் பைக் சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த கார், சாலையை கடக்க முயன்ற பைக் மீது மோதியது. இதில், பைக்கை ஓட்டி சென்றவர் மற்றும் அதில் பயணித்த கட்டிகானப் பள்ளியை சேர்ந்த ராஜேஸ்வரி, 45, பிரேமா, 24, ஆகிய மூன்று பேர் காயமடைந்தனர்.
அவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.விபத்தில் சிக்கிய பைக் திடீரென, நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்து முழுவதும் நாசமானது. இந்த விபத்து காரணமாக, கொல்லப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சூளகிரி போலீசார், தீயில் எரிந்து நாசமான பைக்கை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீரமைத்தனர்.