/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கோவில் நிகழ்ச்சிக்கு தடையால் மறியல் செய்த 60 பேர் மீது வழக்கு
/
கோவில் நிகழ்ச்சிக்கு தடையால் மறியல் செய்த 60 பேர் மீது வழக்கு
கோவில் நிகழ்ச்சிக்கு தடையால் மறியல் செய்த 60 பேர் மீது வழக்கு
கோவில் நிகழ்ச்சிக்கு தடையால் மறியல் செய்த 60 பேர் மீது வழக்கு
ADDED : பிப் 23, 2024 04:30 AM
பாலக்கோடு: பாலக்கோடு புதுார் மாரியம்மன் கோவில் திருவிழாவில், பொது நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என அறிவித்த, ஹிந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து மறியலில் ஈடுபட்ட, 60 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டில் உள்ள புதுார் மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி கோவில் வளாகத்தில் எந்தவிதமான நிகழ்ச்சிகளும் நடத்த அனுமதி இல்லை என, ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் அறிவித்து. இதை கண்டித்து நேற்று முன்தினம் காலை, இக்கோவில் அருகே, 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதாக கூறி, பாலக்கோடு பகுதியை சேர்ந்தவர்கள் குமார், 42, முருகேசன், 43, மற்றொரு முருகேசன், 50, கோவிந்தசாமி, 55, ராஜா, 50, பெருமாள், 42, ரங்கநாதன், 40, சவுந்தர், 38, பாலாஜி, 35, உள்பட, 60 பேர் மீது, பாலக்கோடு போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.