/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பி.டி.ஓ.,வை இழிவாக பேசியவர் மீது வழக்கு
/
பி.டி.ஓ.,வை இழிவாக பேசியவர் மீது வழக்கு
ADDED : மே 04, 2025 01:19 AM
பாப்பிரெட்டிப்பட்டி:தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய பி.டி.ஓ., வாக பணிபுரிந்து வருபவர் செல்வன், 43. இவருக்கு கடந்த, 1ல், அ.பள்ளிப்பட்டி சின்ன ஏரி கரையில், பொதுமக்கள் ஆக்கிரமிப்பு செய்து கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்ய போவதாக புகார் வந்தது. இதையடுத்து விசாரணை செய்ய அ.பள்ளிப்பட்டி சின்ன ஏரிக்கரையில், கோவில் அமைந்துள்ள பகுதிக்கு பி.டி.ஓ., செல்வன், அரூர் ஆர்.டி.ஓ., சின்னுசாமி உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் சென்றனர்.
கோவில் கட்டியது குறித்து மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிலர் முன்னுக்கு பின் முரணான பதில் கூறினர். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த பெரிய
சாமி, 38, என்பவர் அதிகாரிகள் உத்தரவின்றி கோவில் எப்படி கட்ட முடியும் என கேட்டுள்ளார். பி.டி.ஓ., செல்வன், நான் பணியில் சேர்ந்து, ஆறு மாதம் தான் ஆகிறது. அப்படி இருக்கும் போது கட்டிய கோவிலுக்கு நான் எப்படி அனுமதி கொடுத்திருப்பேன் என தெரிவித்தார். இதில் கோபமான பெரியசாமி, 38, பொதுமக்கள், அதிகாரிகள் முன்னிலையில் பி.டி.ஓ., செல்வனை இழிவாக பேசி, பணி செய்வதை தடுத்து, காலணியை கழற்றி அடிக்க வந்ததாக
ஏ.பள்ளிப்பட்டி போலீசில் செல்வன் புகார் செய்தார்.புகாரின்படி, பெரியசாமி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

