/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
'சஸ்பெண்ட்' பால் பரிசோதகர் உள்பட இருவர் மீது வழக்கு
/
'சஸ்பெண்ட்' பால் பரிசோதகர் உள்பட இருவர் மீது வழக்கு
'சஸ்பெண்ட்' பால் பரிசோதகர் உள்பட இருவர் மீது வழக்கு
'சஸ்பெண்ட்' பால் பரிசோதகர் உள்பட இருவர் மீது வழக்கு
ADDED : நவ 01, 2025 01:38 AM
சேலம், சேலம் மாவட்டம், வாழப்பாடி, வி.புதுப்பாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில், 320 உறுப்பினர்கள் மூலம், தினசரி, 5,200 முதல், 5,400 லிட்டர் பால் சேகரிக்கப்படுகிறது. அதில் பாலின் அளவு, தரத்தை குறைத்து, 7 லட்சத்து, 58 ஆயிரத்து, 425 ரூபாய் நிதியிழப்பு நடந்தது கடந்த ஜூனில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் எதிரொலியாக, சங்க செயலர் லிங்கேஸ்வரன், 30, பால் பரிசோதகர் செந்தில்குமார், 45, ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
நிதியிழப்பு தொகையை செந்தில்குமார் உள்பட மோசடிக்கு துணையாக இருந்த நால்வர், கூட்டாகவோ, தனித்தனியாகவோ செலுத்த வேண்டும் என, சேலம் துணைப்பதிவாளர் புவனேஸ்வரி, கடந்த ஆக.,14ல் உத்தரவிட்டார். அதுவரை, 12 சதவீத வட்டி சேர்த்து செலுத்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், நிதியிழப்பு தொகை இன்னும் சங்கத்துக்கு செலுத்தவில்லையென உறுப்பினர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே கடந்த அக்.,20ல், செந்தில்குமார் போதையில், பால் ஏற்ற வந்த லாரியை, சங்கத்துக்கு முன்பாக நிறுத்தி ரகளையில் ஈடுபட்டார். அதனால் பால் அனுப்பும் பணி பாதிக்கப்பட்டது. இந்த வீடியோ வாட்ஸ் ஆப்பில் வைரலானது.
இதுபற்றி, சங்க நிர்வாகி அறிவழகன் வாழப்பாடி போலீசில் புகார் அளித்தார். தீவிர விசாரணைக்கு பின், கடந்த 30ல், செந்தில்குமார், வெங்கடாசலம், 53, ஆகியோர் மீது, கொலை மிரட்டல், தகாத வார்த்தையை பேசியது, வாகனத்தை வழிமறித்தல், மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது என, நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குபதிந்து, தேடி வருகின்றனர்.

