/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 720 மனு வழங்கல்
/
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 720 மனு வழங்கல்
ADDED : நவ 01, 2025 01:39 AM
ஆத்துார், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில், 720 மனுக்கள் வழங்கப்பட்டது.
ஆத்துார் அருகே, வளையமாதேவி, புங்கவாடி, மஞ்சினி ஆகிய ஊராட்சிகளில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. தி.மு.க., சேலம் கிழக்கு மாவட்ட செயலரும், எம்.பி.,யுமான சிவலிங்கம் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
முகாமில் மகளிர் உரிமைத் தொகை கேட்டு, 391 பேர், வருவாய்த்துறை, 139, ஊரக வளர்ச்சித்துறை, 118, சுகாதாரத்துறை, 20, உள்பட மொத்தம், 720 மனுக்கள் வழங்கினர். ஆத்துார் தாசில்தார் பாலாஜி, தி.மு.க., ஒன்றிய செயலர்கள் செழியன், வரதராஜன், வருவாய்த்துறையினர் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
* தாரமங்கலம் துட்டம்பட்டி ஊராட்சி தனியார் மஹாலில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. இதில் மகளிர் உரிமைத்தொகைக்கு, 30 பேர் உட்பட மற்ற 8 துறைகளில் 150 பேர் மனுக்கள் அளித்தனர். தாரமங்கலம் பி.டி.ஓ.,க்கள், வருவாய்த்துறையினர் உட்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

