/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரூ.1.30 கோடிக்கு கால்நடைகள் விற்பனை
/
ரூ.1.30 கோடிக்கு கால்நடைகள் விற்பனை
ADDED : ஜூலை 31, 2025 01:39 AM
அரூர், அரூர் அடுத்த புழுதியூர் வாரச்சந்தைக்கு, ஆடிப்பெருக்கை முன்னிட்டு, நேற்று, 750க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. ஆடுகளை வாங்க ஊத்தங்கரை, சேலம், தர்மபுரி, பொம்மிடி, காரிமங்கலம் உள்ளிட்ட, பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். 10 கிலோ எடை கொண்ட ஆடு ஒன்று, 9,100 முதல், 9,500 ரூபாய் வரை விற்பனையானது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில், ஒவ்வொரு ஆடும், 400 முதல், 700 ரூபாய் வரை, கூடுதல் விலைக்கு விற்பனையானது.
மேலும், கலப்பின மற்றும் ஜெர்சி வகையை சேர்ந்த, 500 மாடுகள் மற்றும் கன்றுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
கலப்பின மாடு ஒன்று, 45,000 முதல், 67,000 ரூபாய் வரை விற்பனையானது. அதேபோல், வளர்ப்பு மாட்டுக்கன்று ஒன்று, 7,000 முதல், 34,000 ரூபாய் வரை விற்பனையானது. நேற்று நடந்த சந்தையில், மாடுகள், 60 லட்சம் ரூபாய், ஆடுகள், 70 லட்சம் ரூபாய் என, மொத்தம், 1.30 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது என, வியாபாரிகள் தெரிவித்தனர்.