/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சரக 'கோ-கோ' போட்டி: ஸ்டான்லி பள்ளி சாதனை
/
சரக 'கோ-கோ' போட்டி: ஸ்டான்லி பள்ளி சாதனை
ADDED : ஆக 15, 2025 03:11 AM
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, சரக அளவில் நடந்து வரும் தடகள மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில், ஸ்டான்லி மெட்ரிக் பள்ளி மாணவர்கள், கோ-கோ போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர். போட்டியில், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கலந்து கொண்டன. வயது வரம்பு அடிப்படையில் சீனியர் பெண்களுக்கான, 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் முதலிடமும், ஆண்களுக்கான, 14 வயதுக்கு உட்பட்டோர் ஜூனியர் பிரிவிலும், 17 வயதுக்கு உட்பட்டோர், சீனியர் பிரிவிலும், 19 வயதுக்கு உட்பட்டோர் சூப்பர் சீனியர் ஆகிய அனைத்து பிரிவுகளிலும் முதலிடமும் பிடித்து சாதனை படைத்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் சத்யராஜ், ஆனந்தகுமார், திவ்யா ஆகியோருக்கு, பள்ளி தாளாளர் முருகேசன், செயலாளர் பிருஆனந்த்பிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்கள், மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.