/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரூர் தொகுதி 3 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைப்பு
/
அரூர் தொகுதி 3 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைப்பு
ADDED : மார் 18, 2024 03:16 AM
அரூர்: தமிழகத்தில், ஒரே கட்டமாக, ஏப்., 19ல் லோக்சபா தேர்தல் நடக்கும் என, தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் எடுத்துச் செல்வதை தடுக்கும் வகையில், அரூர் தொகுதியில், நரிப்பள்ளி, இருமத்துார், அனுமந்தீர்த்தம் என, 3 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சுழற்சி முறையில் பணிபுரியும் வகையில், 3 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
அரூர் தாலுகா அலுவலகத்தில், லோக்சபா தேர்தலை முன்னிட்டு, அரூர் ஆர்.டி.ஓ., மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வில்சன் ராஜசேகர் தலைமையில், நேற்று ஆய்வு கூட்டம் நடந்தது. இதில், அனைத்து ஒருங்கிணைப்பு அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
அரூர் சட்டசபை தொகுதியில், தேர்தல் நன்னடத்தை விதி மீறல்கள் குறித்து, கட்டுப்பாட்டு அறையில் செயல்படும், 04346 -- 296565 மற்றும் கட்டணம் இல்லா தொலைபேசி எண், 1800 425 7017 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு, பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என, அரூர் ஆர்.டி.ஓ., மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வில்சன் ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

