/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பாலக்கோடு அரசு கல்லுாரியில் வேதியியல் துறை கருத்தரங்கம்
/
பாலக்கோடு அரசு கல்லுாரியில் வேதியியல் துறை கருத்தரங்கம்
பாலக்கோடு அரசு கல்லுாரியில் வேதியியல் துறை கருத்தரங்கம்
பாலக்கோடு அரசு கல்லுாரியில் வேதியியல் துறை கருத்தரங்கம்
ADDED : ஆக 07, 2025 01:05 AM
பாலக்கோடு, தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு கலைக் கல்லுாரி வேதியியல் துறைக்கும், நாகப்பட்டணத்திலுள்ள கலிலியோ ஆப்ஷோர் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதையொட்டி, வேதியியல் துறை சார்பில் கல்லுாரி வளாகத்தில் கருத்தரங்கம் நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் தீர்த்தலிங்கம் (பொ) தலைமை வகித்தார்.
வேதியியல் துறை தலைவர் அன்பரசன் வரவேற்றார். நாகப்பட்டணம் கலிலியோ அப்ஷோர் நிறுவன மேலாண் இயக்குனர் சீனிவாசன், பெட்ரோலிய துறையில் வேதியியல் துறை மாணவர்களுக்கு, வேலைவாய்ப்புகள் குறித்து பேசினார். நிகழ்ச்சியில், வேதியியல் துறை பேராசிரியர்கள் கதிர்வேல், வெற்றி அரசு, கவுரவ விரிவுரையாளர்கள், மாணவ,
மாணவியர் கலந்து கொண்டனர்.