/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
துணை சுகாதார நிலையத்திற்கு இடையூறு நடவடிக்கை கோரி எஸ்.பி.,யிடம் மனு
/
துணை சுகாதார நிலையத்திற்கு இடையூறு நடவடிக்கை கோரி எஸ்.பி.,யிடம் மனு
துணை சுகாதார நிலையத்திற்கு இடையூறு நடவடிக்கை கோரி எஸ்.பி.,யிடம் மனு
துணை சுகாதார நிலையத்திற்கு இடையூறு நடவடிக்கை கோரி எஸ்.பி.,யிடம் மனு
ADDED : ஆக 07, 2025 01:05 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், தட்ரஹள்ளி பஞ்., முன்னாள் தலைவர் ரமேஷ், தமிழ்செல்வன் தலைமையில் அப்பகுதியை சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர் நேற்று, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
எங்கள் பகுதியிலுள்ள, 2 ஏக்கர் புறம்போக்கு நிலத்தில்,
துணை சுகாதார நிலையம் அமைக்க கருத்துரு கேட்டு, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு வசித்து வந்தவர்களுக்கு அதன் அருகிலேயே, கடந்த ஜூன், 13ல், நிலம் வழங்கப்பட்டு, முதல்வர் கனவு இல்லம் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அந்த நிலத்தில், 75 லட்சம் ரூபாய் மதிப்பில் துணை சுகாதார மையம் அமைக்க உத்தரவிடப்பட்ட நிலையில், அங்கு வசிக்கும் இரு குடும்பத்தினர், தங்கள் வீட்டை காலி செய்ய மறுக்கின்றனர். அதிகாரிகள் வழங்கிய நோட்டீசையும் அவர்கள் பெற்றுக் கொள்ளாமல், சமூக வலைதளங்களில் அவதுாறு பரப்புகின்றனர்.
எங்கள் பகுதிக்கு துணை சுகாதார நிலையம் வந்தால் தட்ரஹள்ளி, தாமோதரஹள்ளி பஞ்.,களுடன் தர்மபுரி மாவட்டத்தின் கும்மாரஹள்ளி கிராமமும் பயன்பெறும். ஆனால் இதை தடுக்க நினைக்கும் வகையில் ஆதாரமற்ற, உண்மைக்கு புறம்பாக தகவல்களை பரப்புவர் மீதும், அரசு திட்டத்தை செயல்படுத்த விடாமல் தடுப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.