/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் கட்டடங்கள் காணொலியில் திறந்து வைத்த முதல்வர்
/
அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் கட்டடங்கள் காணொலியில் திறந்து வைத்த முதல்வர்
அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் கட்டடங்கள் காணொலியில் திறந்து வைத்த முதல்வர்
அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் கட்டடங்கள் காணொலியில் திறந்து வைத்த முதல்வர்
ADDED : மே 21, 2025 02:01 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள, 6.72 கோடி ரூபாய் மதிப்பிலான வகுப்பறைகள் திறப்பு விழா நடந்தது.
சென்னை, ராணிமேரி கல்லுாரி வளாகத்தில் இருந்து, தமிழக முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சி வாயிலாக உயர்கல்வித்துறை சார்பில் கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களை திறந்து வைத்தும், புதிய கட்டட பணிகளுக்கு அடிக்கல்லும் நாட்டினார். அதன்படி, கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில், 6.72 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள, 5 கூடுதல் வகுப்பறைகள், 5 ஆய்வகங்கள் மற்றும் 2 பணிமனை கட்டடங்களை திறந்து வைத்தார்.
அதேபோல் பர்கூர் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில், 2.33 கோடி ரூபாய் மதிப்பிலும், பர்கூர் அரசு பொறியியல் கல்லுாரியில் 1.67 கோடி ரூபாய் மதிப்பிலும் புதிய கட்டட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து, கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில், மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி, மாணவ, மாணவியருக்கு இனிப்பு வழங்கினர்.
உயர்கல்வித்துறை உதவி செயற்பொறியாளர் சுபிதா பீ, அரசு பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் சாரதா, பர்கூர் அரசு பொறியியல் கல்லுாரி முதல்வர் திருநாவுக்கரசு, தாசில்தார் சின்னசாமி மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.