/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஆன்லைனில் பயிர் கடன் வழங்கல் திட்டத்தை துவக்கி வைத்த முதல்வர்
/
ஆன்லைனில் பயிர் கடன் வழங்கல் திட்டத்தை துவக்கி வைத்த முதல்வர்
ஆன்லைனில் பயிர் கடன் வழங்கல் திட்டத்தை துவக்கி வைத்த முதல்வர்
ஆன்லைனில் பயிர் கடன் வழங்கல் திட்டத்தை துவக்கி வைத்த முதல்வர்
ADDED : ஆக 18, 2025 03:08 AM
அதியமான்கோட்டை: விவசாயிகள் ஆன்லைனில் விண்ணப்பித்த நாளில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம், பயிர்க்கடன் வழங்கும் திட்டத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின்
அதியமான்கோட்டையில் நேற்று தொடங்கி வைத்தார்.
2025--26ம் ஆண்டின் கூட்டுறவுத்துறை மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது, 'தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் விண்ணப்பித்த அன்றே, பயிர்க்கடன் வழங்-கப்படும்' என்ற அறிவிப்பை கூட்டுறவுத்துறை அமைச்சர் வெளி-யிட்டார். தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், 1908ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 117 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இங்கு விவசாய கடன் வழங்கும் திட்டத்தை துவக்கி வைப்பதின் அடையாளமாக நேற்று, அதியமான்கோட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் பாலஜங்கமனஹள்ளி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தை சார்ந்த, 5 விவசா-யிகளுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் வட்டியில்லாத விவசாயக்-கடன் வழங்கி தொடங்கி வைத்தார்.
இதில், பொதுப்பணித் துறை அமைச்சர் வேலு, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், கூட்டுற-வுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., மணி, தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன், கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர் சத்ய-பிரத சாகு, கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர் நந்தகுமார், தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஷ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.