/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பர்கூர் தொகுதியில் 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்
/
பர்கூர் தொகுதியில் 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்
பர்கூர் தொகுதியில் 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்
பர்கூர் தொகுதியில் 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்
ADDED : பிப் 12, 2025 07:08 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு இன்று (புதன்கிழமை) வருகிறார். காலை, 10:00 மணிக்கு பர்கூர் தொகுதி குட்டூர், 10:45 மணிக்கு பட்லப்பள்ளி, 12:00 மணிக்கு பெலவர்த்தி, 1:00 மணிக்கு ஜெகதேவியில் மக்களுடன் முதல்வர் திட்ட, 3ம் கட்ட முகாம்களை துவக்கி வைத்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
நாளை (வியாழக்கிழமை) காலை, 10:00 மணிக்கு பாலேப்பள்ளி, 10:45 மணிக்கு கந்திகுப்பம், 11:30 மணிக்கு அஞ்சூர், 12:30 மணிக்கு போச்சம்பள்ளி, 1:15 மணிக்கு அரசம்பட்டியில் நடக்கும் மக்களுடன் முதல்வர் திட்ட, 3ம் கட்ட முகாம்களை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். எனவே, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள், கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.