/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
/
தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
ADDED : டிச 26, 2024 01:15 AM
தர்மபுரி, .தர்மபுரி தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தன. இயேசு கிறிஸ்து பிறப்பைப் போற்றி பாடல்கள் இசைக்கப்பட்டன. இதையடுத்து, குழந்தை இயேசுவை குடிலில் வைத்து சிறப்புப் பிராத்தனை செய்தனர். தர்மபுரி மறை மாவட்ட மூத்த குரு அருள்சாமி தலைமை தாங்கினார்.
மேலும், முதன்மை குரு அருள்ராஜ் அடிகளார், உதவி பங்குத்தந்தை இயேசு பிரபாகரன், தொன்போஸ்கோ பள்ளி முதல்வர் தந்தை அருள் ரோசோரியோ சிறப்புரை வழங்கினார். இந்த சிறப்பு வழிபாட்டில் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் வழிபட்டனர்.
*அரூர் கச்சேரிமேட்டில், உள்ள துாய இருதய ஆண்டவர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து உறவினர், நண்பர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டதுடன் இனிப்பு வழங்கினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள ஆர்.சி.,- சி.எஸ்.ஐ., ஏசு நம்மோடு திருச்சபை, லுத்தரன் திருச்சபை உட்பட பல்வேறு தேவாலயங்களில், கிறிஸ்துமஸ் விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதிகாலை, 4:00 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை, வழிபாடு நடந்தது. ஏசு பிறப்பு குறித்த போதனைகள் நடந்தன. கிறிஸ்தவ மக்கள் பெரும் திரளாக பங்கேற்று, ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.
*கிருஷ்ணகிரி துாய பாத்திமா அன்னை ஆலயத்தில், கிருஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, நல்லிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. திருத்தல பங்குத் தந்தை இசையாஸ் தலைமையில், கிறிஸ்து பிறப்பு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
இவ்விழாவையொட்டி, தேவாலயம் முழுவதும் வண்ண, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும், தேவாலயத்தின் உட்புறமும், வெளிப்புறமும் இயேசு பாலகனின் பிறப்பை உணர்த்தும் வகையில் சிறப்பு குடில்கள் அமைத்திருந்தனர். இங்கு, ஏராளனமான கிறிஸ்தவ மக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி வழிபாட்டில் ஈடுபட்டனர்.

