ADDED : டிச 23, 2024 09:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி: பொம்மிடியில் கிறிஸ்துமஸ் பெருவிழா கடத்துார் மெயின் ரோட்டிலுள்ள கிறுஸ்துவ ஆலயத்தில் பங்கு தந்தை செபாஸ்டியன் மேத்யூ தலைமையில் நடந்தது. இதில் அன்பழகன் எம்.எல்.ஏ., பேசினார்.
பின் மாவட்டத்திலுள்ள, 20 ஆலய பங்கு தந்தைகளுக்கு புத்தாடைகள், ஏழைகளுக்கு அன்னதானம், இலவச வேட்டி சேலைகள் வழங்கினார். இதில், எம்.எல்.ஏ.,க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், நிர்வாகிகள், களிறு கண்ணன், இளையராஜா, இடும்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்