/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மின் கட்டண உயர்வை திரும்ப பெற சி.ஐ.டி.யு., மாநாட்டில் தீர்மானம்
/
மின் கட்டண உயர்வை திரும்ப பெற சி.ஐ.டி.யு., மாநாட்டில் தீர்மானம்
மின் கட்டண உயர்வை திரும்ப பெற சி.ஐ.டி.யு., மாநாட்டில் தீர்மானம்
மின் கட்டண உயர்வை திரும்ப பெற சி.ஐ.டி.யு., மாநாட்டில் தீர்மானம்
ADDED : ஜூலை 30, 2025 01:58 AM
கரூர், க.பரமத்தியில், சி.ஐ.டி.யு., சங்க மாவட்ட மாநாடு நடந்தது. மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமைவகித்தார். மாநில செயலாளர் ஐடாகெஹலன் மாநாட்டை துவக்கி வைத்தார்.
உள்ளாட்சிகளில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஜவுளி தொழிலை பாதுகாக்க நுால் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். உள்ளூர் தேவைக்கும், மாட்டுவண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் மணல் குவாரிகளை திறக்க வேண்டும். மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் மாவட்ட தலைவராக ராஜாமுகமது, செயலாளராக சுப்பிரமணியன், பொருளாளராக சாந்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சக்திவேல், மாநில துணை செயலாளர் சிங்கராவேலு உள்பட பலர் பங்கேற்றனர்.