/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரியில் சி.ஐ.டி.யு., மறியல் போராட்டம்
/
தர்மபுரியில் சி.ஐ.டி.யு., மறியல் போராட்டம்
ADDED : அக் 02, 2024 01:49 AM
தர்மபுரியில் சி.ஐ.டி.யு., மறியல் போராட்டம்
தர்மபுரி, அக். 2-
சென்னையில் தனியார் மொபைல்போன் நிறுவன தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்து வரும் வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவாக, சி.ஐ.டி.யு., சார்பில், தர்மபுரி தலைமை தபால் நிலையம் முன், மறியல் போராட்டம் நேற்று
நடந்தது.
இதில், சி.ஐ.டி.யு., மாநில செயலாளர் நாகராசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜீவா மாநிலக்குழு உறுப்பினர்கள் கலாவதி, நாகராஜன் மாவட்ட நிர்வாகிகள் சண்முகம் அங்கம்மாள் உட்பட பலர் பேசினர்.
இதில், தனியார் மொபைல்போன் நிறுவனம், தொழிலாளர் நலச்சட்டங்களை மதித்து நடக்க உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். முன்னதாக, தர்மபுரி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகில் இருந்து, பேரணியாக வந்து, தலைமை தபால் நிலையம் முன் மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.