/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சர்க்கரை ஆலையில் லாரி, டிராக்டர் உரிமையாளர் இடையே மோதல்
/
சர்க்கரை ஆலையில் லாரி, டிராக்டர் உரிமையாளர் இடையே மோதல்
சர்க்கரை ஆலையில் லாரி, டிராக்டர் உரிமையாளர் இடையே மோதல்
சர்க்கரை ஆலையில் லாரி, டிராக்டர் உரிமையாளர் இடையே மோதல்
ADDED : பிப் 03, 2024 04:05 AM
பாலக்கோடு: பாலக்கோடு சர்க்கரை ஆலையில், கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் மற்றும் லாரி உரிமையாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் போலீசார் சமரசம் செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த திம்மம்பட்டியில் மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. கரும்பு அரவைக்கு தேவையான கரும்புகளை, லாரி உரிமையாளர்கள் ஒப்பந்த அடிப்படையில், லாரிகளில் ஏற்றி வருகின்றனர். அதேபோல், விவசாயிகள் தங்களுடைய சொந்த டிராக்டரில் கரும்புகளை ஏற்றி வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விதிமுறைகளை மீறி, லாரியில் ஏற்றி வந்த கரும்புகளை முதலில் அரவைக்கு அனுமதிப்பதாகவும், டிராக்டரில் ஏற்றிவரும் விவசாயிகளின் கரும்புகளை ஒரு வாரத்திற்கும் மேல் காத்திருக்க வைப்பதாக குற்றச்சாட்டு தெரிவித்தனர். மேலும், காலம் கடத்தி அரவைக்கு அனுமதிப்பதால், கரும்பின் எடை குறைந்து விடுகிறது. லாரி உரிமையாளர்கள் சுயலாபத்திற்காக, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.
ஆனாலும், டிராக்டரில் விவசாயிகள் ஏற்றி வந்த கரும்புகளை இறக்க விடாமல், லாரி உரிமையாளர்கள் தடுத்ததால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த, பாலக்கோடு போலீசார் மற்றும் சர்க்கரை ஆலை நிர்வாக அதிகாரிகள் இரு தரப்பினரிடையே
பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால், சர்க்கரை ஆலை
வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

