/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நிலத்தகராறில் மோதல்; 7 பேர் மீது வழக்கு
/
நிலத்தகராறில் மோதல்; 7 பேர் மீது வழக்கு
ADDED : ஜூன் 23, 2025 05:31 AM
பாலக்கோடு: பாலக்கோடு அடுத்த ராஜாதோப்பு முனியப்பன் கோவில் பகு-தியை சேர்ந்தவர் கந்தசாமி, 50. இவர் கடந்த, 19 அன்று விவ-சாய நிலத்தில் உழவு பணி செய்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அவரது உறவினர் வேடியப்பன், 30, இந்த நிலத்தில் உழவு பணி செய்யக்கூடாது எனக்கூறி தகராறு செய்துள்ளார்.
நிலப்பிரச்னையில் ஏற்கனவே முன்விரோதம் இருந்த நிலையில், கந்தசாமி மற்றும் வேடியப்பனின் குடும்பத்தினர் அங்கு வந்து, ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். புகார் படி, பாலக்கோடு போலீசார் வடிவேல், 41, கந்தசாமி, 58, முத்துகவுண்டன், 45, பாப்பாத்தி, 50, வேடியப்பன், 30, முனியப்பன், 32, ராஜாம்மாள், 55, ஆகிய, 7 பேர் மீது, வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.