ADDED : ஆக 10, 2026 01:37 AM
அ நிறம் | அளவு
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலையில், தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள ராமர், குமாரர் உள்ளிட்ட தீர்த்தங்களில் புனித நீராட, தமிழகத்தின் பல்-வேறு பகுதிகளில் இருந்து, தினமும், 2,500க்கும் மேற்பட்ட, பக்-தர்கள் வந்து செல்கின்றனர்.
இங்கு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்-துள்ள நிலையில், தீர்த்தமலை அடிவாரத்தில் இருந்து, மலைக்-கோவிலுக்கு செல்லும் பாதையில் பாலிதீன் பைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ஆங்காங்கே குவிந்துள்ளன. இந்நி-லையில், 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் சார்பில், நேற்று தீர்த்தமலை மலைக்கோவிலுக்கு செல்லும் வழியில் குவிந்துள்ள பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பையை அகற்றும் பணி நடந்தது. இதில் தன்னார்வ-லர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
