/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மூடப்பட்ட துவக்க பள்ளி; மாணவர் சேர்க்கையால் மீண்டும் திறப்பு
/
மூடப்பட்ட துவக்க பள்ளி; மாணவர் சேர்க்கையால் மீண்டும் திறப்பு
மூடப்பட்ட துவக்க பள்ளி; மாணவர் சேர்க்கையால் மீண்டும் திறப்பு
மூடப்பட்ட துவக்க பள்ளி; மாணவர் சேர்க்கையால் மீண்டும் திறப்பு
ADDED : அக் 16, 2025 01:02 AM
ஏரியூர்: மாணவர் சேர்க்கையின்றி மூடப்பட்ட, ஏமனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர் சேர்க்கையால் நேற்று திறக்கப்பட்டது.
தர்மபுரி மாவட்டம், ஏரியூர் ஒன்றியம் கிழக்கு ஏமனுாரில், 300க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். தர்மபுரி மாவட்டத்தின் கடைகோடியில் மலைப்பகுதியில் அமைந்துள்ளது, கிழக்கு ஏமனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி.
இங்கு, ஒன்று முதல், 5ம் வகுப்பு வரை படித்து வந்த மொத்தம், 9 மாணவர்களும் வேறு பள்ளிகளில் சேர்ந்ததாலும், நடப்பாண்டில் புதிய மாணவர் சேர்க்கை இல்லாமலும், கடந்த ஏப்ரல் மாதம் பள்ளி மூடப்பட்டது.
மலைப்பகுதியான இங்கு மீண்டும் துவக்கப்பள்ளியை திறக்க, மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த ஒரு மாதமாக அந்த ஊர்மக்கள், முன்னாள் மாணவர்கள், அருகாமையிலுள்ள பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் சேர்ந்து, பள்ளி செல்லும் மாணவர்களின் பெற்றோரை சந்தித்து பேசினர்.
மறைந்த இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்த நாளான நேற்று, தர்மபுரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தென்றல் தலைமையில், கிழக்கு ஏமனுார் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி திறக்கப்பட்டது.
இதையடுத்து, அப்பகுதியை சேர்ந்த, 7 மாணவர்கள் பள்ளியில் சேர்ந்தனர். இதில், 2, 3 மற்றும் 4வது வகுப்பில் தலா, 2 மாணவர்களும்; 5ம் வகுப்பில் ஒரு மாணவரும் சேர்க்கப்பட்டனர். மேலும், அருகாமையிலுள்ள பள்ளியில் இருந்து,
ஒரு ஆசிரியர் பணி நியமனம் செய்யப்பட்டார்.
நிகழ்ச்சியில், ஏரியூர் தொடக்கக் கல்வி அலுவலர் முருகன், மேற்கு ஏமனுார் தொடக்கப்பள்ளி ஆசிரியர் தனபால் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.