/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மழையால் பாதிக்கப்பட்ட 5.66 லட்சம் ஏக்கர் பயிர்களுக்கு ரூ.289.63 கோடி நிவாரணம் வழங்க உத்தரவு: முதல்வர்
/
மழையால் பாதிக்கப்பட்ட 5.66 லட்சம் ஏக்கர் பயிர்களுக்கு ரூ.289.63 கோடி நிவாரணம் வழங்க உத்தரவு: முதல்வர்
மழையால் பாதிக்கப்பட்ட 5.66 லட்சம் ஏக்கர் பயிர்களுக்கு ரூ.289.63 கோடி நிவாரணம் வழங்க உத்தரவு: முதல்வர்
மழையால் பாதிக்கப்பட்ட 5.66 லட்சம் ஏக்கர் பயிர்களுக்கு ரூ.289.63 கோடி நிவாரணம் வழங்க உத்தரவு: முதல்வர்
ADDED : டிச 28, 2025 08:28 AM

திருவண்ணாமலை: ''பருவ மழை மற்றும் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட, 5.66 லட்சம் ஏக்கர் பயிர்களுக்கு, ரூ.289.63 கோடி நிவாரணம் வழங்க கடந்த, 23ம் தேதி உத்தரவிடப்பட்டுள்ளது,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
நவீன தொழில் நுட்பங்கள், புதிய ரகங்கள், வேளாண் இயந்திரங்கள், மதிப்புக்கூட்டும் தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வை, விவசாயிகள், கல்லுாரி மாணவர்கள், பொது-மக்கள், உணவு பதப்படுத்துபவர்கள் மற்றும் ஏற்-றுமதியாளர்களிடையே விழிப்புணர்வு ஏற்ப-டுத்தும் வகையில் வேளாண் கண்காட்சி, கருத்த-ரங்தை திருவண்ணாமலையில் நேற்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின், விவசாயி-களுக்கு வேளாண் நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
பாடுபடுகிற விவசாயிகளுக்கு இயற்கையும், மண்ணும் கை கொடுத்தால்தான் மகசூல் சரியாக இருக்கும். இன்றைக்கு தொழில் நுட்பம் எவ்வ-ளவோ வளர்ந்துள்ளது. இந்த வளர்ச்சி விவசா-யிகள் கையில் வந்து சேர்ந்தால்தான், உண்மை-யான வளர்ச்சியாக மாறும்.சிலர் விவசாயிகளை தவிக்கவிட்டு, நடுத்தெ-ருவில் போராட விட்ருவாங்க; இன்னும் சிலர், விவசாயி வேடம் போட்டுகிட்டு, அரசியல் பண்-ணுவாங்க. விவசாயிகள் பாதிக்கிற சட்டங்களை ஆதரிப்பாங்க, விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துவாங்க, ஆனால், திராவிட மாடல் அரசில், விவசாயிகளின் நலனும் வளர்ச்-சியும்தான் முக்கியம். அதனால்தான், வேளாண்-மைக்கு தனி பட்ஜெட் போட ஆரம்பித்தோம்.
இதுவரை, 5 வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்து, ஒரு லட்சத்து, 94,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்-பட்டுள்ளது. இதில், 5வது பட்ஜெட்டில் மட்டும், 45,661 கோடி ரூபாய். இவை கடந்த, 202021ம் ஆண்டோடு ஒப்பிட்டால், 33 சதவீதம் அதிகம். வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களுக்கு ஏற்ப, விவசாயத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகனும்,கடந்த, 5 ஆண்டுகளாக மேட்டூர் அணையில் இருந்து, பாசனத்திற்கு சரியான நேரத்தில் தண்ணீர் திறக்கப்படுகிறது. 20 லட்சம் விவசா-யிகள் பயனடையும் வகையில், 481 கோடி ரூபாய் செலவில், குறுவை சிறப்பு திட்டம் கொண்டு வரப்-பட்டுள்ளது. இந்தாண்டு முதன் முறையாக, டெல்டா இல்லாத மாவட்டங்களில்,
கார், குறுவை, சொர்ணாவாரி பருவங்களில், நெல் சாகுபடிக்கான சிறப்பு திட்டத்தை, 132 கோடி ரூபாயில் செயல்படுத்தியிருக்கிறோம்.
உழவர் தொழிலை வலுப்படுத்த, அனைத்து கிராம அண்ணா மறுலர்ச்சி திட்டத்தோடு இணைத்து, 5 ஆண்டு திட்டமாக கொண்டு வந்து, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், 12,525 கிராம பஞ்சா-யத்துகளிலும் செயல்படுத்தக்கூடிய இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு, 54,701 ஏக்கர் தரிசு நிலங்-களை, சாகுபடி நிலமாக மாற்றப்பட்டுள்ளது. 320 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, 27 லட்சம் விவசாயிகள் பயனடையக்கூடிய வகையில், மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
கடந்த, 202425ம் ஆண்டு வட கிழக்கு பருவ மழை மற்றும் ஜனவரியில் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட, 5.66 லட்சம் ஏக்கருக்கு, நிவாரண
தொகையாக, 289 கோடியே 63 லட்சம் ரூபாய், 3 லட்சத்து, 60,000 விவசாயிகளுக்கு, மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்க கடந்த, 23ம் தேதி
உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்தாண்டு கன மழையால் ஏற்பட்டுள்ள பயிர் சேதங்களுக்கு, விரைவில் நிவாரண உத-வித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு பேசினார்.விழாவில் அமைச்சர்கள் வேலு, பன்னீர்-செல்வம், மகேஷ், துணை சபாநாயகர் பிச்சாண்டி, கலெக்டர் தர்ப்பகராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்-றனர்.

