/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வீணாகி நிற்கும் பேட்டரி வாகனங்கள்
/
ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வீணாகி நிற்கும் பேட்டரி வாகனங்கள்
ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வீணாகி நிற்கும் பேட்டரி வாகனங்கள்
ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வீணாகி நிற்கும் பேட்டரி வாகனங்கள்
ADDED : டிச 28, 2025 08:27 AM
அரூர்: அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், பஞ்சாயத்து பகுதிகளுக்கு வழங்க வேண்டிய பேட்டரி வாகனங்கள், 5 மாதங்களாக மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் வீணாகி வரு-கிறது.
தர்மபுரி மாவட்டம், அரூர் ஒன்றியத்தில் செல்-லம்பட்டி, தீர்த்தமலை, நரிப்பள்ளி, கோட்டப்பட்டி, கீரைப்பட்டி, அச்சல்வாடி உள்ளிட்ட, 34 பஞ்.,கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான பஞ்.,களில் குப்பை கொண்டு செல்வதற்கு தேவையான வாகனங்கள் இல்லை. தள்ளுவண்டிகளில் குப்பை சேகரித்து கிடங்கிற்கு கொண்டு செல்வதில் சிரம மும் நேர விரயமும் ஆகிறது. மேலும், குப்பை சேகரிக்க பேட்டரி வாகனங்கள் வாங்குவதற்கான நிதிநிலை பல பஞ்.,களில் இல்லை.இதனை தொடர்ந்து, பஞ்சாயத்து பகுதிகளில் குப்பை சேகரிக்க, துாய்மை பணியாளர்களுக்கு கடந்த, 5 மாதங்களுக்கு முன், அரூர் ஊராட்சி ஒன்-றிய அலுவலகத்திற்கு, 20க்கும் மேற்பட்ட பேட்டரி வாகனங்கள் கொண்டு வரப்பட்டது. இதில், சில பேட்டரி வாகனங்கள் பஞ்சாயத்துகளுக்கு வழங்-கப்பட்ட நிலையில், 5 வாகனங்கள் வழங்கப்ப-டாமல், அரூர் யூனியன் அலுவலக வளாகத்தில் ஓரம் கட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவை வெயில், மழையில் நனைந்து வீணாகி வருகிறது. எனவே, அவற்றை பஞ்.,களுக்கு வழங்க வேண்டும்.
இது குறித்து, அரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி கூறுகையில், ''இரண்டு வாகனங்-களை அரசு திரும்ப எடுத்து செல்ல உள்ளது. மீதி மூன்று வாகனங்களில் பேட்டரி டவுனாக இருப்-பதால், அதை மாற்றி தர சொல்லியுள்ளோம்,' என்றார்.

