ADDED : டிச 06, 2024 07:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பட்டுகோணாம்பட்டி ஊராட்சி, எலந்தகொட்டப்பட்டியை சேர்ந்தவர் சென்னன், 33. இவர் தன் விவசாய கிணற்றில், நீரில் மூழ்கிய மோட்டாரை கயிறு கட்டி மேலே எடுக்க கிணற்றில் இறங்கினார். பின் கிணற்றிலிருந்து மேலே ஏற முடியாமல் தவித்தார். பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறையினர் சென்று அவரை மீட்டனர்.
மெனசி ஊராட்சி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் நந்தகுமார். இவரது வீட்டின் குளியலறையில் நாகப்பாம்பு இருந்தது. பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு படையினர் பாம்பை உயிருடன் பிடித்து அப்பகுதியிலுள்ள வனப்பகுதியில் விட்டனர்.