sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தாசில்தாரை கண்டித்த கலெக்டர்

/

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தாசில்தாரை கண்டித்த கலெக்டர்

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தாசில்தாரை கண்டித்த கலெக்டர்

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தாசில்தாரை கண்டித்த கலெக்டர்


ADDED : மார் 29, 2025 07:33 AM

Google News

ADDED : மார் 29, 2025 07:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம், கலெக்டர் சதீஸ் தலைமையில் நடந்தது.இதில், விவசாயிகள் பேசியதாவது:

தர்மபுரி மாவட்டத்தில் ஒரு கிலோ தக்காளி, 6 ரூபாய்க்கு விவசா-யிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுவதால், இழப்பு ஏற்ப-டுகிறது. தக்காளியை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடப்பாண்டில் கரும்பு சாகுபடி குறைந்து விட்டது.

வேளாண் சுற்றுலாவுக்கு, ஒவ்-வொரு ஆண்டும் அதே விவசாயிகளை அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும். தர்மபுரி சிப்காட்டிற்கு நிலம் கையகப்படுத்-தும்போது, புறம்போக்கு நிலங்களில் உள்ள நீர்நிலைகளை தாரை வார்க்கக் கூடாது. மாவட்டத்தில் அதிகம் விளையும் துவரை, அவரை மற்றும் கொள்ளு ஆகியவற்றை வேளாண் ஒழுங்கு-முறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு பேசினர்.இதற்கு பதிலளித்து கலெக்டர் சதீஸ் பேசுகையில்,''தக்காளியை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி விற்பனை செய்வதற்-கான, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தடங்கத்தில் அமைக்-கப்படும் சிப்காட்டில், நீர் நிலைகளை ஒதுக்கிவிட்டு நிலம் கைய-கப்படுத்தப்பட்டுள்ளது. பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டு, நிவா-ரணம் கிடைக்காத விவசாயிகள் தற்போது விண்ணப்பித்தாலும் நிவாரணம் வழங்கப்படும்,'' என்றார்.மேலும், பாலக்கோடு பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் என்பவரு-டைய நிலத்தின் பட்டாவில், வேறு ஒருவருடைய பெயர் தவறுத-லாக பதிவானதை, அதன் உரிமையாளர் மனு அளித்தும், 6 மாத-மாக கிடப்பில் போடப்பட்டதாக விவசாயி தெரிவித்த தகவலின்-படி, பாலக்கோடு தாசில்தார் ரஜினியை கண்டித்ததுடன், பொது-மக்கள் மனு குறித்து, விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க முடியவில்லை எனில், வேலையை விட்டு நின்று விடுங்கள்' என, காட்டமாக கூறினார்.






      Dinamalar
      Follow us