/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஏரிகளில் கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை; கலெக்டர் எச்சரிக்கை
/
ஏரிகளில் கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை; கலெக்டர் எச்சரிக்கை
ஏரிகளில் கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை; கலெக்டர் எச்சரிக்கை
ஏரிகளில் கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை; கலெக்டர் எச்சரிக்கை
ADDED : மே 02, 2025 02:16 AM
காரிமங்கலம்:
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம், பைசுஹள்ளி பஞ்.,ல் மே, 1 தொழிலாளர் தினத்தையொட்டி, நேற்று நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் பேசுகையில், ''அனைத்து பஞ்.,களிலும் பொதுமக்கள் மரக்கன்றுகள் நடவு செய்து, பசுமையான தர்மபுரி மாவட்டமாக மாற்ற வேண்டும். கிராமங்களின் வளர்ச்சிக்கு அரசு செயல்படுத்தி வருகின்ற திட்டங்களை, பொதுமக்களும் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும், ஏரிகளை துார்வாருவதற்கான பணிகள், தொண்டு நிறுவனங்கள் மூலம், மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, ஏரிகளில் குப்பை மற்றும் கழிவுகளை கொட்டும் நபர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
இதில், தர்மபுரி ஊராட்சிகள் உதவி இயக்குனர் நிர்மல் ரவிக்குமார், பி.டி.ஓ.,க்கள் உட்பட தொடர்புடைய அலுவலர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
* நல்லம்பள்ளி ஒன்றியம், பூதனஹள்ளி பஞ்.,ல் மே தின சிறப்பு கிராம சபை கூட்டம், பஞ்., செயலர் ரூபாவதி தலைமையில் நேற்று நடந்தது. இதில், பூதனஹள்ளி, நார்த்தம்பட்டி, லளிகம் ஆகிய, 3 பஞ்.,களை சேர்ந்த விவசாயிகள், பூதனஹள்ளி பஞ்.,ல் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
* பொம்மிடியில் ஊராட்சி துரிஞ்சிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், போதக்காடு ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது.
* நாயக்கன்கொட்டாயில் நேற்று, உழைப்பாளர் தினத்தையொட்டி, நீலம் பண்பாட்டு மையம் சார்பில், இலவச மருத்துவ முகாம் நடந்தது. இதில், தொழிலதிபர் ஜான்சன் பாபு, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

