ADDED : ஜூன் 04, 2026 05:07 AM
அ நிறம் | அளவு
மொரப்பூர்; தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த எம்.பள்-ளிப்பட்டியை சேர்ந்தவர் முத்துலட்சுமணன், 19, இவர், ஏற்காட்டில் உள்ள தனியார் கல்லுாரியில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் இரண்டாமாண்டு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு ஊருக்கு வருவதற்காக சேலத்தில் இருந்து முத்துலட்சுமணன் ரயிலில் வந்தார். தொட்டம்பட்டி அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்த முத்துலட்சுமணன் தலையில் படுகாயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பலி-யானார். மொரப்பூர் ரயில்வே போலீசார் விசாரிக்-கின்றனர்.
