ADDED : ஜூலை 24, 2025 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி, தர்மபுரி மாவட்டம், குள்ளனுாரை சேர்ந்தவர் ஆர்த்திக்சா, 22. இவர், வீட்டிலிருந்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தொலைதுார கல்வி மூலம், பி.சி.ஏ., இரண்டாமாண்டு படித்து வந்தார். கடந்த, 21ல் காலை, 8:30 மணிக்கு கல்லுாரி செமஸ்டர் தேர்வு எழுத செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. கடந்த, 5 ஆண்டுகளுக்கு முன், குள்ளனுார் மாரியம்மன் கோவிலுக்கு பெயின்ட் அடிக்க வந்த, நாகப்பட்டணம் பகுதியை சேர்ந்த பிரகதீஸ்வரன், 25, என்பவருடன், ஆர்த்திக்சாவிற்கு பழக்கம்
ஏற்பட்டதாகவும், அவர் தன் மகளை அழைத்துச் சென்றிருக்கலாம் எனவும், ஆர்த்திக்சாவின் தாய் கலா, 42, பாப்பாரப்பட்டி போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்படி போலீசார்
விசாரிக்கின்றனர்.