/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறுதல்
/
வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறுதல்
வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறுதல்
வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறுதல்
ADDED : ஆக 09, 2025 01:51 AM
அரூர், தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா வாச்சாத்தியில், கடந்த, 1992ம் ஆண்டு வனத்துறை மற்றும் போலீசாரால், 18 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா, 10 லட்சம் ரூபாய் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், பொருளாதார ரீதியாக முன்னேற தொழில் மற்றும் இரண்டு ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில் வாச்சாத்திக்கு நேற்று சென்ற அகில இந்திய விவசாயிகள் சங்க தலைவர் அசோக்தாவலே, துணிச்சலுடன் நீண்ட போராட்டம் நடத்திய வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்களை பாராட்டினார்.
முன்னதாக முக்கனி பழ வகைகளை கொடுத்து அசோக்
தாவலேவை பெண்கள்
வரவேற்றனர்.