/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரி கிழக்கு, மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் கருணாநிதி நினைவு நாள் அனுசரிப்பு

ADDED : ஆக 09, 2025 01:52 AM
தர்மபுரி, தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின், 7-ம் ஆண்டு நினைவு நாள் தர்மபுரியில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, தர்மபுரி ராஜகோபால் கவுண்டர் பூங்கா அருகில் இருந்து, மாவட்ட பொறுப்பாளர் வக்கீல் மணி எம்.பி., தலைமையில், நகர செயலர் நாட்டான் மாது முன்னிலையில் அமைதி ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று, அண்ணா சிலை முன் முடிவடைந்தது. அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
முன்னாள் எம்.பி., சேகர், மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாவட்ட துணை செயலர்கள், நகராட்சி தலைவர், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதேபோன்று தர்மபுரி மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்திற்கு மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் தலைமையில், நிர்வாகிகள் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். இதேபோன்று காரிமங்கலத்தில் உள்ள கட்சி அலுவலகத்திலும், கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய, தி.மு.க., சார்பில் இண்டூர் பஸ் ஸ்டாண்டில் கருணாநிதி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. ஒன்றிய பொறுப்பாளர் பெரியண்ணன் தலைமை வகித்து, கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினார்.