/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பிரிட்டிஷ் ராணுவப்படை கேப்டன் நினைவு தினம் அனுசரிப்பு
/
பிரிட்டிஷ் ராணுவப்படை கேப்டன் நினைவு தினம் அனுசரிப்பு
பிரிட்டிஷ் ராணுவப்படை கேப்டன் நினைவு தினம் அனுசரிப்பு
பிரிட்டிஷ் ராணுவப்படை கேப்டன் நினைவு தினம் அனுசரிப்பு
ADDED : மார் 22, 2024 07:07 AM
அதியமான்கோட்டை : அதியமான்கோட்டை பகுதியில், மறைந்த பிரிட்டிஷ் ராணுவப்படை கேப்டன் ரம்ஷேவின், 178வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
கடந்த, 1846 ஆண்டில் பிரிட்டிஷ் ராணுவ கேப்டனாக இருந்த ரம்ஷே, தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை பகுதியில், ராணுவ பயிற்சியில் ஈடுபட்டபோது காயமடைந்து, 1846 மார்ச், 21ல் இறந்தார்.
அவருடைய, 178-வது நினைவு தினத்தை முன்னிட்டு, தர்மபுரி மாவட்ட தகடூர் முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கம் சார்பில், அதியமான்கோட்டை பயணியர் விடுதி எதிரே உள்ள அவரது நினைவிடத்தில், மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட தலைவர் நரசிம்மன் தலைமை வகித்தார். இதில், டி.ஆர்.ஓ., பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், தர்மபுரி டி.எஸ்.பி., சிவராமன் ஆகியோர், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதில், சின்னசாமி, மல்லிகார்ஜுனன், பசுவராஜ், ராஜாஜி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள் மற்றும் ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.

