ADDED : டிச 27, 2024 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி, டிச. 27-
தர்மபுரி மாவட்ட, இ.கம்யூ., கட்சியின் நுாற்றாண்டு விழா, மூத்த நிர்வாகி நல்லகண்ணு,
100-வது பிறந்த நாள் விழா, மறைந்த கம்யூ கட்சி தலைவர் தங்கமணியின், 23-ம் ஆண்டு நினைவு நாள் என முப்பெரும் விழா நடந்தது. தர்மபுரி ரயில்வே ஸ்டேஷன் செல்லும் சாலையில் உள்ள இ.கம்யூ., கட்சி அலுவலகத்தில், தர்மபுரி மாவட்டகுழு சார்பில் இந்த முப்பெரும் விழா நடந்தது. மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் தேவராசன் கட்சி கொடியேற்றி வைத்து பின் உறுதிமொழி எடுத்து கொண்டனர். தொடர்ந்து, கட்சியின் முன்னாள் தலைவர் தங்கமணியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட துணை செயலாளர் தமிழ்க்குமரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் சின்னசாமி, கமலாமூர்த்தி, ஏ.ஐ.டி.யூ.சி., மாவட்ட செயலாளர் மணி உள்பட பலர் பங்கேற்றனர்.

