/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நோயாளிகளிடம் பரிவு: கலெக்டர் அறிவுரை
/
நோயாளிகளிடம் பரிவு: கலெக்டர் அறிவுரை
ADDED : ஜூன் 16, 2025 03:35 AM
அரூர்: அரூர், அரசு மருத்துவ மனையில், தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், அங்கு பதிவு செய்யப்பட்டுள்ள கர்ப்பிணிகளின் எண்ணிக்கை, அவர்களுக்கு ஸ்கேன் சேவைகள், ஆய்வக பரிசோதனைகள், கர்ப்-பிணிகள் மற்றும் பிரசவித்த பெண்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்தும், ரத்த சோகை வராமல் தடுக்க இரும்புச்சத்து மாத்தி-ரைகள் முறையாக வழங்கப்படுகிறதா என்பது குறித்தும், மருத்து-வர்கள் மற்றும் செவிலியர்களிடம் கேட்டறிந்தார்.மேலும், பொது மருத்துவம், பெண்கள் நலப்பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு, விஷ முறிவு சிகிச்சைகள் மற்றும் விஷ முறிவு சிகிச்-சைக்களுக்கான மருந்து இருப்பு, உள்ளிட்ட பிரிவுகளில் ஆய்வு மேற்கொண்டு, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் அக்க-றையுடனும், பரிவுடனும் நடந்து கொண்டு சிகிச்சையளிக்க மருத்-துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது, அரசு துறை அலுவலர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலி-யர்கள் உடனிருந்தனர்.