ADDED : மார் 14, 2024 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர், அரூர் சட்டசபை தொகுதியில் தேர்தல் அறிக்கை குழு சார்பில், மக்களிடம் குறைகளை தெரிவிக்க பா.ஜ., கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து, பா.ஜ., அரூர் சட்டசபை தொகுதி பொறுப்பாளர் சாமிக்கண்ணு கூறியதாவது: பா.ஜ., தேர்தல் அறிக்கை குழு மக்கள் கருத்தை கேட்டு அறிக்கை தயாரிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, தர்மபுரி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, அரூர் சட்டசபை தொகுதியில், அரூர் தாலுகா அலுவலகம் முன், நேற்று முன்தினம் முதல், ஒரு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. வரும், 20 வரை அப்பெட்டி இருக்கும். அதில் பொதுமக்கள் தங்கள் தொகுதி பிரச்னைகளை எழுதி போடலாம். மக்களுக்கான கட்சி, பா.ஜ., என்பதால் மக்களிடமே கருத்து கேட்டு பதிவு செய்யப்பட்டு, அது தேர்தல் அறிக்கைகளில் இடம் பெறவுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

