/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அண்ணாமலையை கண்டித்து காங்., கட்சி ஆர்ப்பாட்டம்
/
அண்ணாமலையை கண்டித்து காங்., கட்சி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 13, 2024 08:19 AM
அரூர்: பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து, காங்., கட்சி சார்பில் அரூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை குறித்து, சமீபத்தில் நிருபர்களிடம் பேட்டியளித்த பா.ஜ., மாநில தலைவர் அண்ணா-மலை, ரவுடி என்ற வகையில் அவதுாறான கருத்துக்களை பேசி-யதால், காங்., சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மேலும், அண்ணாமலையை கண்டித்து நேற்று அரூர் தாலுகா அலுவலகம் எதிரில், காங்., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தொழி-லாளர் பிரிவு இம்ரான் தலைமை வகித்தார். இதில், பா.ஜ., தலை-வருக்கு எதிராக பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்-பாட்டத்தில், நிர்வாகிகள் அகமது, அக்பர் ெஷரிப் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.